புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் | பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' | 'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம் | அடுத்தடுத்த வெற்றிகள்… 'பரிமளா அண்ட் கோ'வுக்கும் கிடைக்குமா ? | நயன்தாரா சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த ராஷ்மிகா |

சமீபத்தில் பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்ற திரைப்படம் வெளியானது. அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள இந்த படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடியை தாண்டி வசூலித்து வெற்றி படமாக மாறி உள்ளது. இந்த படத்தை பற்றி பல ஹீரோக்கள் குறிப்பாக தெலுங்கு திரை உலகை சேர்ந்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி ஆகியோர் சிலாகித்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதே சமயம் திரிஷா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் இந்த படத்தை புகழ்ந்து கூறியபோது அவர்களுக்கு எதிர்மறை பதில்கள் தான் கண்டனங்களாக கிடைத்தன. இந்த நிலையில் நடிகர் நானி, அனிமல் படம் பற்றி சமீபத்தில் கூறும்போது, “இந்த படத்தில் ரன்பீர் கபூரின் உருமாற்றம் பார்த்து அசந்து விட்டேன். இனி இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




